Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

ஊரை ஏமாற்றி உலையில் போடும் சோதிடர்கள்…!  

 

சோதிடர்களின் ஏமாற்று வேலைகளுக்கு ஓர் எல்லை இல்லாமல் போய்விட்டது.

அவர்களின் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் திருகுதாளமும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

அவர்களை நம்பி அடியோடு கெட்டுச் சீரழிபவர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டு இருக்கிறது.

`எவர் எக்கேடு கெட்டாலும் கெடட்டும்; எங்களுக்கு என்ன? எங்களுக்குப் பணம் வந்தால் போதும் என்னும் சிந்தனையோடு திட்டமிட்டுச் சமுதாயத்தைக் கெடுக்கிறார்கள்.

இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளிவந்த சோதிடப் பகுதியில் ஒரு வினா:

பிள்ளைகளின் படிப்பைக் குறித்துக் கவலையுறும் பெற்றோர்கள் அதுபற்றிப் பேசவேண்டுமானால் அவர்கள் பயிலும் பள்ளிக்குச் செல்லவேண்டும். ஆசிரியர்களிடம் கலந்துரையாடவேண்டும்; தேவையெனில் மருத்துவர்களை நாடவேண்டும்.

ஆனால் இந்தத் தந்தையோ சோதிடரிடம் கேட்கிறார்.

`அவனது போக்கில் எப்போது மாற்றம் ஏற்படும் என்னும் கேள்விக்குக் கல்வியாளர்களோ மருத்துவர்களோ விடையிறுக்கக்கூடும்.

`10–ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அவன் தேர்ச்சி பெறுவானா என்பது அடுத்த கேள்வி; இக்கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியுமா?

`பரிகாரம் ஏதும் செய்யவேண்டுமா என்பது இன்னொரு கேள்வி.

கண்டிப்பாகப் `பரிகாரம் செய்யவேண்டும்; `என்ன செய்யவேண்டும் என்று சொல்லத் தகுதி உடையவர்கள் கல்வியாளர்களும் மருத்துவர்களுமே ஆவர்.

எல்லாக் கேள்விகளுக்கும் சோதிடப் புரட்டர் விடை சொல்கிறார்:

`இந்தப் பிள்ளையின் படிப்புப் பிரச்சினைக்குக் கோள்களே காரணம்; கோள்கள் இடம் மாறும்போது பிரச்சினை தானே நீங்கிவிடும் என்கிறார் சோதிடர்.

என்ன மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்றும் சொல்கிறார்; இதனைச் சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

`உங்கள் மகனின் வருங்காலம் குறித்துப் பெரிதாகக் கவலைப்பட ஏதுமில்லைஎன்றால் என்ன பொருள்? `என்னை நம்புங்கள்; அவன் படிப்புக் குறித்து ஏதும் சிந்திக்கத் தேவையில்லை; அவன் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகட்டும் என்றுதானே பொருளாகிறது?

பெண்மணி ஒருவர் கேட்கிறார்:+

நான் கடந்த மூன்று வருடங்களாக

முதுகுச் சவ்வு விலகல் நோயினால்

கஷ்டப்பட்டு வருகிறேன். சமைக்கக்

கூட முடியவில்லை. எப்போது நான் பூரண குமடைவேன்?.

 

 மருத்துவரைக் காணவேண்டும்; அவரைக் கேட்கவேண்டும்; ஆனால் சோதிடரைக் கேட்கிறார்.

சோதிடர் சொல்கிறார்:

`அடுத்த ஆண்டு மேத் திங்களுக்குப் பிறகு தீரும் என்றால் என்ன பொருள்?

`கோள்களின் இருப்பால் நோய் வந்துள்ளது; அடுத்த ஆண்டு மேத் திங்களுக்குப் பிறகு கோள்களின் நிலை மாறும்; நோய் தீரும்; அப்போதுதான் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்என்றுதானே சொல்கிறார்?

`இன்னும் ஏழு திங்கள் நோயில் துன்புற்றுத்தான் ஆகவேண்டும்; மருத்துவம் செய்துகொண்டாலும் நோய் தீராதுஎன்று பொய் சொல்லி ஏமாற்றலாமா?

மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச் 
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் 
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக 
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

இது பட்டினத்தார் பாடல்.

கண்காட்டும் வேசியருக்கும் சோதிடர்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்தச் சோதிட வேசியரின் ஏமாற்று வலையில் சிக்கினால் அங்காடி நாய்போல் அலைய நேரிடுவது திண்ணம்; தவிர்க்க இயலாது.

சிக்கிக்கொள்ளாது இருப்பதே அறிவுடைமைக்குச் சான்றாகும்.

- அ. நம்பி

 

 

 

 

 

 

 

 

 

மேற்கண்ட கட்டுரையைப் பற்றிய தங்களின் கருத்துக்களை கீழ்கண்ட Email க்கு

அனுப்பி வைக்கலாம்.. nkkcbe@gmail.com