Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                           

பக்தி மார்க்கம் - 1  

        -திருக்குறள் ராம . கனக சுப்புரத்தினம்  - சிற்றின்பம் - பேரின்பம் 

 

      சரியை மார்க்கம் என்பது வெறும் நம்பிக்கையை அடிப்படையைக் கொண்டது. இதை பக்தி மார்க்கம் என்றும் சொல்லலாம். அறிவு நிலைகள் பற்றிய எவ்வித விழிப்புணர்வும் இந்த மார்கத்திர்க்குத் தேவை இல்லை. முன்னால் செல்பவன் செய்வதைப் பார்த்து பின்னால் செல்பவன் பின்பற்ற வேண்டியதுதான். ஏன். எதற்கு என்ற அறிவு பூர்வமான கேள்விகளெல்லாம் இந்த மார்க்கத்தில் இடமில்லை. 

 

    முடி என்றல் ஆணவம் என்பது பொருள். இறைவனை உணர விடாமல் மனத்தை மூடியிருக்கும் மூடியே ஆணவம் என்ற முடி. அதாவது கிரீடம். அந்த ஆணவ முடியை அகற்றினால் ஆண்டவனை உணரலாம் என்பது தத்துவம். இந்தத் தத்துவத்தை விளக்கும் விதமாக கொடுமுடி நாதர் என்ற சிவன் கோவிலை கொடுமுடி என்ற ஊரில் காணலாம். 

 

   முடி என்றல் தலைமயிர் என்ற பொருளும் உண்டு. யாரோ ஒருவன் தத்துவத்தை தவறாக புரிந்து கொண்டு கொடுமுடி என்றவுடன் தலைமயிரைக் கொடுப்பது என்று நினைத்து கோவிலில் மொட்டை அடித்துள்ளான். அவ்வளவுதான். எந்த கோவிலில் பார்த்தாலும் குடும்பம் குடும்பமாய் மொட்டைகள். பழனி மொட்டை, திருப்பதி மொட்டை என வகை வகையை மொட்டைகள். 

 

   இதனை அழகான பூமியை, வானத்தை,சூரியனை, நிலவை, விண்மீன்களை, இன்னும் திரும்பிய திசையெல்லாம் அழகழகாய் பூக்கள், காய்கள், கனிகள், மலைகள் அருவிகள் என்ற  தந்துள்ள இறைவனுக்கு நாம் தரும் காணிக்கை ஈரும் பேணும் நிரம்பி சிக்குப் பிடித்து நாற்றமெடுத்த தலை மயிரகவா இருப்பது. 

 

   இதுதான் சரியை எனப்படும் சடங்குகள் நிரம்பிய உருவ வழிபாட்டு மார்கத்தில் இருக்கும் கோளறு. மக்களில் எண்பது சதவீதத்தினர் இந்த மார்க்கத்தில் இருப்பவர்களே. அறிவுபூர்வமாய் சிந்திக்க தயங்கும் மூளை சோம்பேறிகள். குருட்டு நம்பிக்கைக்கு ஆட்பட்டு விதிக்கு உட்பட்டு வாழ்பவர்கள். விதியை வெல்லும் மதி நுட்பம் குறித்து உணராதவர்கள். போலி சாமியார்களை நம்பி ஏமாறுபவர்கள்.

 

   மூட நம்பிக்கைகள், குருட்டு பக்தி, ஜடத்தனமான சடங்குகள் நிரம்பிய இந்த சரியை மார்க்கத்தில் செல்லும் மக்களில் ஏதோ ஒரு சிலருக்கு குருட்டு அதிஷ்டத்தின் காரணமாகவும், அவர்களின் இயற்கையான மனப்பக்குவத்தின் காரணமாகவும் நினைப்பது நிறைவேறிவிடும். உடனே அவர்கள் தங்கள் வெற்றியை ஊர் முழுக்க பரப்பி விடுகிறார்கள். 

  திருப்பதியில் மொட்டை போட்டேன், என் வியாபாரம் பெருகுகிறது. அய்யப்பனுக்கு மாலை போட்டேன். அத்தனை பிரச்சனையும் தீர்ந்து விட்டது. என்பது போல் விளம்பரம் செய்து விடுகிறார்கள். இந்த மார்கத்தில் எந்த வெற்றியும் கிடைக்காத 80%  மக்கள் வாயை திறப்பதில்லை என்று அமைதியாகி  விடுகிறார்கள்.நம் நேரம் சரியில்லை. நமக்கு அதிஷ்டம் இல்லை என்று அமைதியாகி விடுகிறார்கள் எனவே இந்த மார்க்கத்தில் கூட்டம் குறைவதே இல்லை. 

-திருக்குறள் ராம . கனக சுப்புரத்தினம்  - சிற்றின்பம் - பேரின்பம்