Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய் Breast Cancer Awarness Ribbon

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப்Picture of Breast Self Exam புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக

உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும்

இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர்

திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில்,

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும்,

அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும்,

ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

Courtesy: tamil.webdunia.com

பாலூட்டுவதால் மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு குறைவு

பெண்கள் குறைந்தது 6 மாதங்கள் வரையோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கோ தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதால், பிற்காலத்தில் மார்பகப்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று தெரிய வந்துள்ளது.Picture of Invasive Ductal Carcinoma

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களின் வயது, தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறைகள் போன்றவை மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன.

மார்பகப் புற்றுநோய் ஏற்பட்ட பெண்களின் பின்னணி குறித்தும், அவர்களின் நோய் தன்மை பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.
Picture of Breast Anatomy
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஆகியவை வெளிப்படுவதன் அடிப்படையிலும் மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

எனவே மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பிக்க வேண்டுமா? குறைந்தது ஒரு வருடமாவது குழந்தைகளுக்கு பால் கொடுங்கள் தாய்மார்களே!

 

மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு

பெண்கள் பிறக்கும் போது மிகவும் குண்டாகவும், நீளமாகவும் இருப்பார்களானால், அவர்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.Picture of Mastectomy

உலக அளவில் புற்றுநோயால் பெண்கள் மரணம் அடைவதில், மார்பகப் புற்றுநோய் மிக முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது பெண்குழந்தைகள் பிறக்கும்போதே உடல் பருமன் அதிகமாகவும், நீளமாகவும் இருக்கும் நிலையில், பின்னாளில் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி மார்பகப் புற்றுநோய்க்கும், குழந்தைப் பருவத்தில் எடைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பிறக்கும்போது குண்டாக இருந்த சுமார் 6 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 22 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.

பெண்களின் வயது, தாமதமான மாதவிலக்கு நிற்பது போன்ற காரணங்களுடன் குழந்தைப் பருவத்தில் குண்டாக இருப்பதும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குழந்தைப் பருவத்தில் நீளமான உடல்வாகைக் கொண்டிருந்தால் மார்பகப் புற்று நோய் வாய்ப்பு அதிகம் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பெண் குழந்தைகள் 4 கிலோ அல்லது அதற்கு மேல் எடை இருப்பின் மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு சுமார் 12 விழுக்காடு அதிகம் என்றும் அது கூறுகிறது.

சுமார் 80 வயதாகும் பெண்களுக்கு அவர்களின் குழந்தைப் பருவ எடை காரணமாக 5 விழுக்காடு அளவு மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு உருவாகும் என்றும் அது தெரிகிறது. வேறு சில ஆய்வுகளின்படி, குழந்தைப்பருவ உடல் எடை பின்னாளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

 

Photograph of a breast cancer awareness ribbon