இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு
பெருத்தவனுக்கு கொள்ளைக் கொடு
என்பது நம் முன்னோர்கள் வாக்கு.
இதிலிருந்தே இதன் மருத்துவத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியா முழுதும் பரவிக் காணப்படும்
குத்துச்செடி வகையைச் சார்ந்தது. இதில் நாட்டுக் கொள்ளு, காட்டுக்
கொள்ளு என இரு வகைகள் உள்ளன. இதில் கருமை, செம்மை, வெண்மை என மூன்று
பிரிவுகள் உள்ளன. இன்னும் ஒருவகை பேய்க்கொள்ளு என்று அழைக்கப்படுகிறது.
கொள்ளுவை ஒரு உணவாகவே நம் முன்னோர்கள்
சாப்பிட்டு வந்தனர். இடைப்பட்ட காலத்தில் கொள்ளுவின் பயன்பாடு குறைந்து
போனது. காரணம் கொள்ளுவில் உள்ள சத்துக்கள் பற்றி இடைக்கால மக்கள்
தெரிந்துகொள்ளாமல் போனதுதான்.
கொள்ளுவை காணம் என்ற பெயரிலும்
அழைக்கின்றனர்.
குடல் வாதங் குன்மமுண்டாங் கொள்மருந்தோ
நாசம்
அடலேறு பித்தமிக ஆகுங்-கடுகடுத்த
வாதநீ ரேற்றமொடு மன்னுகுளிர்
காய்ச்சலும்போகுஞ்
சாதிநறுங் கொள்ளுக்குத் தான்
(அகத்தியர் குணபாடம்)
உடல் வலுப்பெற
சிலர் நோய்வாய்ப்பட்டதாலும், சத்தான
உணவுகள் கிடைக்காததாலும் நோஞ்சான் போல் காணப் படுவார்கள். இவர்கள்
கொள்ளுவை வறுத்து கஞ்சியாகச் செய்து தினமும் மூன்று வேளையும் குடித்து
வந்தால் உடல் நன்கு வலுப்பெறும், புத்துணர்வு பெறும்.
கொள்ளுவை அரிசியுடன் சேர்த்தும் கஞ்சி
செய்யலாம். மேலும் கொள்ளுவை வறுத்து துவையலாகவும் பயன்படுத்தலாம்.
நன்கு பசியைத் தூண்ட
சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால்
எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள்
முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட
முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து
கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ
சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல் என்பது ஒரு நோய் என்றால்
சிரிப்பார்கள். மலச்சிக்கல், மனச்சிக்கல் இரண்டுமே நோய்களை உற்பத்தி
செய்யும் தொழிற்சாலைகளாகும். மனச்சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் தானாகவே
வந்துவிடும். மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கலும் கூடவே வரும்.
இந்த மலச்சிக்கலைத் தீர்க்க கொள்ளு
சிறந்த மருந்து. கொள்ளுவை சட்னியாகவோ கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு
வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
சிறுநீர் பெருக்க
சிறுநீர் நன்கு பிரிந்தால்தான் உடலில்
உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக
இருக்கும். இரத்தம் சுத்தமடையும்.
சிறுநீரகச் செயல்பாட்டிற்கு கொள்ளு
சிறந்த மருந்து. கொள்ளுவை தினமும் உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர்
நன்கு பிரியும்.
இடுப்பு வலி மூட்டு வலி மாற
இடுப்பு வலி, மூட்டு வலியால்
அவதியுறுபவர்கள் கொள்ளுவுடன் பூண்டு, மிளகு சேர்த்து ரசம் செய்து
அருந்தி வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி நீங்கும்.
பெண்களுக்கு
நீண்ட நாட்களுக்கு மாதவிலக்கு வராமல்
இருப்பதும், அதிகமான உதிரப்போக்கும் இருப்பதற்குக் காரணம் உடலில் வலு
இல்லாமையே. இவர்கள் கொள்ளுவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால்
மேற்கண்ட தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.
கொள்ளுவில் புரதச் சத்து, கொழுப்பு
சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சத்து தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.
இருமல் சளி நீங்க
1 பங்கு கொள்ளுக்கு 10 பங்கு நீர்விட்டு
காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்றாகக்
கடைந்து கொடுத்து வந்தால் இருமல், சளி நீங்கும்.
கொள்ளுவை அரைத்து வீக்கக் கட்டிகள் மேல்
பூசி வந்தால் வீக்கம் குறையும்.
கொள்ளு இரசம்
வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங்
குக்கி
சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச
காசம்
உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி
யொழியும் வெப்பைப்
பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல
தோடம் போம்
கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும்.
மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப்
போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப்
பெருக்கும்.
உடல் பருத்து (தொளதொளவென்று) தசை
இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால்
தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும்.
-nandri
nakkeeran
|
|
|
கொள்ளு சூப் (ரசம்)
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்
அவ்வளவுதான் சளி காணாமல் போயிவிடும். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த
கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள்
வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த
காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைகுறைக்கும். அதை விட
ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன்
முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.
தேவையான பொருள்கள்:
·
கொள்ளு – 4 ஸ்பூன்
·
பூண்டு - 5 பல்
·
தக்காளி - 2
·
மிளகு – 1
ஸ்பூன்
·
சீரகம் – 1
ஸ்பூன்
·
துவரம்பருப்பு – 1
ஸ்பூன்
·
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
·
கொத்தமல்லித்தழை – சிறிது
·
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
·
நல்லெண்ணெய் -
சிறிது
·
கடுகு -
சிறிது
·
வரமிளகாய் -
2
செய்முறை:
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
(ஒரு வாணலியில்
எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வருத்துக்கொள்ளவும்)
அரைத்தக் கலவையில் 5
டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
கடுகு,
வரமிளகாய்,
கறிவேப்பிலை,
மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க
விடவும்.
நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேவையான
அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
குறிப்பு
கொள்ளை ஆட்டி பால் எடுத்து ( தண்ணீர்க்கு பதில் ) அதில்
சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது
பயன்படுத்தலாம்.( நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை
போட்டால் அருமையாக இருக்கும் )
********************************************************************
கரைக்கவே
முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப்
அருமையான மருந்து என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இது சளிக்கு சரியான மருந்து. மேலும் இது என் சுய அனுபவத்தில் பயன்படுத்தி
குணமடைந்திருக்கிறேன். .
கொள்ளு
சூப் தயாரிக்கும் முறை
கொள்ளு
-
2
தேக்கரண்டி
மிளகு -
1/2
தேக்கரண்டி
சீரகம்
-
1/2
தேக்கரண்டி
பெருங்காயம்-
1/2
தேக்கரண்டி
பூண்டு
-
2
பல்
தக்காளி
-
1
கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது
இவை
யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.4கப்
தண்ணீரில் கரைத்து,1
தேக்கரண்டி நல்லெண்ணெய்,
1/4
தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி,
தேவையான
அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை
அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
*******************************************************************
25
வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை
எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே
விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு
சுமையாக மாறியிருக்கும்.இது அத்திரி சொன்னது. சரி
கொள்ளு இனி என்ன சொல்லுது என்று பார்ப்போமே...
இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன்
கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு -
களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன்
கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.அதாவது,
மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு
உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது
தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
மருத்துவ குணம்: கொள்ளுப்
பருப்பை ஊற வைத்து,அந்த
நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத்
தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு
உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும்
சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல்
உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள்
போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக்
கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை
வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத்
தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும்,நரம்புக்கும்
உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும்
குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை
பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும்
கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க
மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு
உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும்
கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை
வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில்
கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல்
செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து
குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த
கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை
அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த
காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி
கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு
கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை
சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும்
சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும்
போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு
பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு
ரசம்,கொள்ளு
துவையல்,கொள்ளு
குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை
குறையும்.
கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு
– 4
ஸ்பூன்
பூண்டு -
5
பல்
தக்காளி -
2
மிளகு
– 1
ஸ்பூன்
சீரகம்
– 1
ஸ்பூன்
துவரம்பருப்பு
– 1
ஸ்பூன்
பெருங்காயம் -
1ஃ2
ஸ்பூன்
கொத்தமல்லித்தழை
–
சிறிது
கறிவேப்பிலை
–
சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் -
2
செய்முறை
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து
கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்)
அரைத்தக் கலவையில்
5
டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது
நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை,
மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க
விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு
சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு சூப்
2
தேவையான பொருட்கள் :
கொள்ளு
1
கப்
தக்காளி
1 / 2
சின்ன கத்தரிக்காய்
1
பச்சை மிளகாய் 4
தனியா
1
டீஸ்பூன்
சீரகம்
1
டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள்
1
டீஸ்பூன்
எண்ணெய்
1
ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள்
தூள்,தண்ணீர்
சேர்த்து
5
விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக
வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி,
சீரகம்,கறிவேப்பில்லை
போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி
விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய்
விட்டு சாப்பிடவும்.
கொள்ளு ரசம்
கொள்ளு -
1
கப்
வரமிளகாய் -
3
மல்லி -
1
டீஸ்பூன்
சீரகம் -
1ஃ2
டீஸ்பூன்
மஞ்சள்தூள் -
1ஃ2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் -
1ஃ2
அல்லது சின்ன வெங்காயம் -
8
நறுக்கியது
பூண்டு -
3
பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை
கொள்ளை குக்கரில் வைத்து
3
கப் தண்ணீர் விட்டு
4
விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,
சீரகம்,மஞ்சள்தூள்
சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர்
சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை
தாளித்து வெங்காயம்,பூண்டு
சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
கொள்ளு மசியல்
கொள்ளு -
200
கிராம்
சீரகம் -
1
டீஸ்பூன்
தனியா -
1
டீஸ்பூன்
தக்காளி -
2
காய்ந்த மிளகாய் -
4
பூண்டு -
5
பல்
சிறிய வெங்காயம் -
10
புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை -
10
இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து
கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்)
அரைத்தக் கலவையில்
5
டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது
நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை,
மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க
விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு
சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு குழம்பு
கொள்ளு -
1
கப்
வரமிளகாய் -
3
மல்லி -
1
டீஸ்பூன்
சீரகம் -
1/2
டீஸ்பூன்
மஞ்சள்தூள் -
1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் -
1/2
அல்லது சின்ன வெங்காயம் -
8
நறுக்கியது
பூண்டு -
3
பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை
கொள்ளை குக்கரில் வைத்து
3
கப் தண்ணீர் விட்டு
4
விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம்,
மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த
தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,
கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு
சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
பொடியாக்கி வைத்துக்கொள்ள.
துவரம் பருப்பு,கொள்ளு
இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில்
சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய
பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த
பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு
சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப்
புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.
(பெருங்காயம்
கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)
|
|