அதிர்ச்சி நம்பர்-2: இந்திய
ஆண்களில் 20 கோடி பேருக்கு ஆண்மைக்குறைபாடு இருக்
கிறது. சர்க்கரை நோயின் அதிகபட்ச தாக்கம், ரத்த அழுத்தம் அதிகரிப்பு, உடல் குண்
டாகுதல், மன அழுத்தம் நிறைந்த வேலை, நள்ளிரவுக்கு மேலும் தொடர்ந்து டெலிவிஷன்
பார்த்துக் கொண்டிருப்பது... போன்றவை ஆண்மைக்குறைபாட்டுக்கு முக்கிய காரணங்
களாக இருக்கின்றன.
அதிர்ச்சி நம்பர்-3: `லேண்ட்
ஆப் காமசூத்ரா' என்ற புகழுடன் உலகத் துக்கே முதன்
முதலில் காமத்தை விஞ்ஞானபூர்வமாக கற்பித்த இந் தியா, தற்போது செக்சில் பலகீனமான
நிலையில் இருப்பதால் வெளி நாடுகளில் உள்ள பாலியல் புதுமைகள் இங்கு
இறக்குமதியாகின்றன. அதனால் இந்தியாவில் செக்ஸ் முரண்பாடான நிலை உருவாகி,
செக்சில் பிற்போக்கான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம்....''
-இப்படிப்பட்ட கருத்துக்களால்
பாலியல் மாநாட்டில் பரபரப்பு தொற்றிக் கொள்ள,
நாம் பாலியல் கண்காட்சி நடந்துகொண்டிருந்த ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய
வளாகத்திற்குள் நுழைந்தோம். அங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், தன்
மனைவியோடு வந் திருந்து கண்காட்சி அரங்கினுள் இருந்த ஆலோசகரிடம் தன் கையி
லிருந்த சீட்டைக் காட்டி, `நான் ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை பெற்
றுக்கொண்டிருக்கிறேன். டாக்டர் மருந்து, மாத்திரைகள் எல்லாம் எழுதிக் கொடுத்து
ஒரு நாள் எத்தனை தடவை இதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் எத்தனை தடவை செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே?' என்று தயங்கித்
தயங்கி கேட்டார்.
மாநாட்டில் கேட்ட அதிர்ச்சித்
தகவலையும், இங்கே கண்ட அறியா மையையும் முடிச்சுப்
போட்டு பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், செக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நிபுணரான ஜீனா நம் கண்ணில் பட்டார். அமெரிக்க
இளம்பெண்ணான இவர், பட்டுப்புடவை கட்டியிருந்தார். மூக்குத்தி வேறு ஜொலித்தது.
அவரோடு கைகோர்த்தபடி இன்னொரு டாக்டர். அவர் பெயர் அருள் புகழேந்தி கண்ணன்.
நிïயார்க்கில் மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
செக்ஸ் மாநாட்டில் பலரது
கவனத்தையும் கவர்ந்த அவர்களிடம் பேச்சு கொடுத்தோம்.
"செக்ஸ் கலைக்கு முன்னோடியாக
இருந்த இந்தியாவில் திருமணமான பெண்களில் 80
சதவீதம்பேர் செக்சில் உச்சகட்ட நிலையை அடைவதேயில்லை. இந்தியாவில் செக்சை
`என்ஜாய்மென்ட்'டாக செய்வதில்லை. ஏதோ கூடை முடைவது மாதிரியும்- மண்பாண்டம்
செய்வது போலவும் நினைத்துக்கொண்டு செக்சில் ஈடுபடுகிறார்கள்''-என்று ஆரம்பித்
தார்கள்.
சந்தோஷமாக இங்குள்ளவர்கள்
அனுபவிக்க முடியாததற்கு என்ன காரணம்?
"கணவரும், மனைவியும் உழைத்து
வருமானம் பார்த்தால்தான் வாழ்க்கையை அனுபவிக்க
முடியும் என்று நினைத்துக்கொண்டு, வாழ்க்கையை அனுபவிக்காமலே உழைக்கிறார்கள்.
வேலைக்கு போய்விட்டு களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள். அதன்பின்பு தூக்க
மாத்திரை போல் செக்சை நினைத்துக்கொண்டு ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டு
தூங்கி விடுகிறார்கள். இன்னொரு சாரார் குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே செக்ஸ்
என்று நினைக்கிறார்கள். இந்திய பெண்களுக்கு செக்சில் புதுமையை கடைப்பிடிக்கும்
ஆர்வமே யில்லை''
அமெரிக்க பெண்கள் செக்சில்
நிறைய புதுமைகளை கடைப்பிடிக்கிறார்களோ?
"ஆமாம். தேவைப்படும் நேரத்தில்
அவர்கள் நடை, உடை, பாவனை எல்லாமுமே செக்ஸ்
தூண்டுதல் தரும் விதத்தில் இருக்கும். உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக்
கொண்டால்தான் கணவரை ஈர்க்க முடியும் என்பதால் மார்பை பெரிதாக்கிக்கொள்ளுதல்,
அடிவயிற்று தசையைக் குறைத்தல், தொடையை அழகுபடுத்துதல், செக்ஸ் சின்னங்களை
டாட்டூஸ்களாக உடலில் பதித்துக்கொள்ளுதல் போன்றவைகளில் கவனம் செலுத்து
கிறார்கள். குழந்தை பிறந்த பிறகு பிறப்பு உறுப்பு நெகிழ்ச்சியடைந்து விடுவதால்
அதை இறுக்கமாக்கிக் கொள்வதற்கான நவீன ஆபரேஷன்களையும் செய்து கொள்கிறார்கள்''
சர்வதேச அளவில் எடுக்கப்படும்
கருத்துக்கணிப்புகளில் மேற்கத்தியநாட்டு
தம்பதிகளே அதிக அளவில் செக்சில் ஈடுபடுவதாக கூறப்படுகிறதே. இது உண்மையா?
"உண்மைதான். செக்ஸ்
கலாசாரத்தில் மேற் கத்திய நாடுகளுக்கும் இந்தியாவிற்கும்
தலை கீழான வேறுபாடு இருக்கிறது. அமெரிக்காவில் திருமணமான தம்பதிகள் வருடத்தில்
சில நாட்கள் தங்கள் குழந்தைகளை தவிர்த்து விட்டு தாங்கள் மட்டும் `பீச்
ரிசார்ட்' பகுதியில் ரூம் போட்டு `தாம்பத்யத்தை' முழுமையாக அனுப விப்பார்கள்.
அந்த சில நாட்களும் புதுவிதமான `அனுபவங்களில்' ஈடுபடுவார்கள். தங்கள் வாழ்க்
கையில் மிக இன்றியமையாத நாட்களாக அவை களை நினைத்து அதற்காக எவ்வளவு பணம்
வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது?
காதலிக்கும் போது அது போல் அறை எல்லாம் எடுத்து சந் தோஷமாக இருக்கிறார்கள்.
திருமணமான பிறகு வாழ்க்கையை புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் அவர்கள்
ஈடுபடுவதில்லை''
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற
நாடுகளில் உயர்நிலைப் பள்ளிகளில்கூட ஆணுறை
பயன்படுத்தும் நிலை உள்ளதாமே?
"இன்று சிறுவர்களின்
பெட்ரூமுக்குள்ளே உலகம் கொண்டுவரப்பட்டு விட்டது. அதற்கு
இன்டர் நெட் காரணமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது என்று
நினைத்து பெற்றோர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பது தவறு. ஆண்-பெண்
இருவருமே டீன்ஏஜ் பருவத்தை தொடும் முன்பே அவர்களுக்கு காதல் உணர்வு
வந்துவிடுகிறது. ஒரே வயதில், ஒரே நேரத்தில் இருவருமே காதல் உணர்வு
கொள்கிறார்கள். அதற்கு யாராலும் தடை போட முடியாது என்பது எல்லோருக்கும்
தெரியும். அதனால் செக்ஸ் வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டால் பாதுகாப்பாக வைத்
துக்கொள்ளுங்கள் என்று மேலை நாடுகளில் உணர்த்தப்படுகிறது. இங்கு அது அடக்
கப்படுகிறது. அடக்கப்படுவதும், மறுக்கப்படுவதும்,
கண்டுங்காணாமலும்
விட்டுவிடப்படுவதும் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்''
தம்பதிகள் இடையேயான செக்ஸ்
தொடர்புக்கு ஏற்ற நேரமாக கருதப்படுவது எது?
"செக்ஸ்க்கு நேரம் கிடையாது.
தம்பதிகள் இருவருக்குமே பிடித்த நேரம்- மற்ற
வர்களுக்கு தொந்தரவு இல்லாத நேரத்தில் வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அமெ
ரிக்காவில் கணவனும்- மனைவியும் தங்கள் அன்பை பரிமாறுவதற்கு எந்த இடம் என்று
பாராமல் முத்தம் கொடுத்துக் கொள்வார்கள். அப்படி பொது இடத்தில் முத்தம் கொடுப்
பதை இந்தியாவில் தவறாக எடுத்துக் கொள்வார்கள். முத்தம் காமம் அல்ல, அன்பு. அத
னால்தான் பொது இடத்தில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியே தன் மனைவிக்கு முத்தம்
கொடுக்கிறார்''
மனைவிக்கு உறவில் ஆர்வம்
இருந்தாலும், கணவரே அழைக்கட்டும் என்றுதானே இங் குள்ள
பெண்கள் காத்திருக்கிறார்கள்?
"தன் விருப்பத்தை
வெளிப்படுத்தினால், கணவர் தப்பாக புரிந்துகொள்வார் என்று இங்
குள்ள பெண்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணமாக இருப்பது ஆணாதிக்கம். பெண் ணின்
உண்மையையும், பெண்மையின் எதிர்பார்ப்பையும் ஏற்றுக்கொள்ளாத சமூகம் முழு
வளர்ச்சியடையாது. மனைவியின் செக்ஸ் தேவையை கணவரால் முழுமையாக பூர்த்தி செய்ய
முடியாவிட்டால் அது சமூக குற்றம். அமெரிக்கப்பெண், கணவன் மூலம் செக்ஸ் திருப்தி
பெறவில்லை என்றால், கணவரிடம் நேரடியாகவே கேட்டுவிடுவாள். இங்குள்ள பெண்களுக்கு
அந்த வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை.
அதுபோல் செக்ஸ் உறவு கொள்ளும்
முறையில் முன்பு 500 வகையே இருந்தது. அதில்
இந்தியர்கள் அதிக பட்சம் 10 முறைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்போது நவீன
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்கர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவு நிலை
களை உருவாக்கி செக்சில் ஈடுபடுகிறார்கள். இந்திய தம்பதிகளும் அதிகப்படியான நிலை
களில் உறவு கொள்ள முன்வர வேண்டும்.''
செக்ஸ் பிரச்சினை என்பது எல்லா
காலத்திலும் இருந்ததுதான். இப்போது அதை மிகப்
பெரிய பிரச்சினையாக்கி, செக்ஸ் மருந்துகள், செக்ஸ் திருப்திக்குரிய பொம்மைகள்
போன்றவைகளின் விற்பனையை உலக அளவில் அதிகரிக்கச் செய்வதாக குற்றஞ்சாட்
டப்படுகிறதே?
"இது தவறான கருத்து. பழைய
காலத்தில் செக்சில் திருப்தி பெறாமல் அல்லது செக்ஸ்
வன்முறையால் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிப்புக்கு உள்ளான பெண்ணை, பேய்
பிடித்தவள் என்று தனிமைப்படுத்தினார்கள். அவளுக்கு சாமி ஆடி அருள்வாக்கு சொல்வ
தாக ஏமாற்றினார்கள். குழந்தையில்லாவிட்டால் மரங்களையும், ஆலயங்களையும் சுற்றச்
சொன்னார்கள். இப்போது அனைத்தும் விஞ்ஞானபூர்வமாக அணுகப்படுகிறது. கவுன் சலிங்,
சிகிச்சை தரப்படுகிறது. பிரச்சினைகள் மருத்துவரீதியாக தீர்க்கப்படுகின்றன. சமூ
கத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைத்தான் தேடவேண்டுமே தவிர, பிரச்
சினைகளை திசை திருப்பக்கூடாது'' என்றார்கள்.
சர்வதேச செக்ஸாலஜிஸ்ட்
மாநாட்டில் பிரபல பாலியல் மருத்துவர்கள் அடைக்கண், நாரா
யணரெட்டி, சுதாகர் கிருஷ்ணமூர்த்தி, முர்ரே.. போன்றவர்கள் கலந்து கொண்டனர்.