|
முருங்கை ஓர் இயற்கை வயாகரா
டாக்டர்.கே.தனபாலன்
Nandri Maatru marutthuvam
வயகரா! வயகரா!!
வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள்
அனைத்திலும்,
உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த
வார்த்தை. திடீரென்று உடனடி
நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத்
தூண்டி, காமத்தை அனுபவிக்க
உதவும் ஒரு
மருந்தின் பெயர். இவ்வயகரா
மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும்,
அதிக
சக்தியும் உள்ளதோ அவ்வளவு
வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும்
சக்தியும் உண்டு என்பதும் உண்மை.
வருங்காலத்தில் மருத்துவ உலகம்
ஆராய்ந்து, அனுபவித்த பின்
வயகராவிற்குத்
தடை விதிக்காமல் இருக்க முடியாது
என்பதும் உண்மை. முருங்கையும்,
மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல
பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை,
உயர்ந்தவை,
உகந்தவை. ஆயிரம் முறை போகம்
(உடலுறவு) செய்தாலும்,
உடற்கட்டு
சிறிதும் குறையாமல் இருந்ததால்
பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது.
அவர் சீனா சென்று பல ஆண்டுகள்
வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப்
போகர் என்றே பெயர் இருந்ததாகக்
கூறப்படுகிறது.
மூலிகைகள் உண்டு அதிக போகத்தில்
(உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே
பெயர் பெற்றார். அவர் சொன்ன
மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை
செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற
மருந்துப் பொருளோடு சேர்ந்தால்
வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. 64
கலைகளில் பாலுறவு என்னும்
காமச்சூத்திரக் கலையும் ஒன்று. மிக உயர்ந்த
உன்னதக் கலையை மிருகங்கள்
ஒன்றோடொன்று இணைந்து தன் உடலிச்சையைத்
தீர்த்துக் கொள்வதுபோல்,
அனுபவிப்பதில் பயனில்லை.
மனிதனும் வயகரா மருந்துண்டு
10 நிமிடம் மிருகவெறியுடன்
புணர்ச்சியில்
ஈடுபட்டால் மிருகத்திற்கும்,
மனிதனுக்கும் வேறுபாடில்லை. சிலை,
சிற்பம்,
சித்திரங்களில் உள்ளது போன்று
நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில்
மாற்றி மாற்றி உடலுறவு சுகங்களை
அனுபவிக்கும் போதுதான் மனிதனின்
ஐம்பொறிகளின் உணர்வுக்கும்,
சுவை,
ஒளி,
ஊறு,
ஓசை,
நாற்றம் என்பவைகளால்
ஈர்க்கப்பட்டு,
உடலுக்கும்,
மனத்திற்கும் பலவிதமான சுவைகளைச்
சுவைத்து, உள்மனம் என்ற
உயிர் ஜீவன் ஏகாந்த நிலையையும்,
இன்பத்தையும் அடைய முடியும்.
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை,
முருங்கைப்பூ,
இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து,
சிறுசிறு துண்டுகளாக வெட்டி,
வதக்கி,
பொரித்து,
அதில் வேர்க்கடலையை
வறுத்துப் பொடி செய்து,
தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை
அதிகரிக்கும்..
விறைப்பு நீடிக்கும்,
வேகமும் பெருகும்,
வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு
வாரி வழங்கிட ஆண்தன்மை
வந்து துள்ளும், கீரையும்,
பூவும் சம அளவில்
சேர்த்து,
வேகவைத்து கடைந்து குழம்பாகவும்
உபயோகிக்கலாம்.
விந்து விருத்தியாக :
முருங்கைப் பூ 10,
சுத்தமான பசும்பாலில் சேர்த்து,
காய்ச்சி இரவு
படுக்கும்போது குடிக்க,
விந்து விருத்தியாகும்,
தேகம் பலம் பெறும்,
அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச்
சாப்பிட, விந்து
விருத்தியாவது
மட்டுமின்றி விந்து கெட்டியாகும்.
விந்து சீக்கிரம் முந்தாமலும்
இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது
போல், தீராத தாகம்
தீர்ந்தது போல், ஆனந்தக்
கடலில் ஆண், பெண்
மூழ்கலாம்.
காமம் பெருக :
முருங்கைப் பூவை உணவாகவோ,
மருந்துகளில் சேர்த்தோ,
பச்சையாகவோ எந்த
விதத்தில்,
எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும்,
உண்டபின் உடலில் காமத்தைப்
பெருக்கும். இச்சையைத்
தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை
மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன்
அரை பங்கு முருங்கை பூ
சேர்த்துக்கடைந்து,
சோற்றுடன் சாப்பிடலாம். காமம்
பெருகும், வயகரா
உண்டால்,
காமஉணர்ச்சி வந்து,
உடன் போய்விடும். ஆனால் இந்த
இயற்கை வயகரா
உண்டால்,
அணையில் நீர்த்தேக்கம் போல் காம
உணர்ச்சி அப்படியே அலைமோதி
நிற்கும்.
வயகரா உண்டவருக்கு ஒருவித
மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து
போய்விடும். ஆனால் இந்த முருங்கை
வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000
நரம்புகளிலும் இன்பக் களிப்பு
ஏகாந்த நடனமிடும்.
பாலுறவில் பரவசமடைய :
முருங்கைக் கீரையைப் பொடியாக
அரிந்து, அதில் கேரட்
திருவி போட்டு, பசு
நெய் விட்டு,
பொரித்து,
இறுதியில் முட்டையை அதில் ஊற்றி
கிளறி, பொரித்துண்ண ஆண்கள்
பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம்
அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா
பாசமும், மதிப்பும்
கொள்வாள். இல்லற
சுகத்தில் இருவரும் ஒரு நிலையில்
உல்லாசம் காண்பர்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக்
கொண்டு வந்து அனலில் காட்டி,
சாறு
பிழிந்து குடிக்க,
காம உணர்வு பெருகும்,
மனையாளுக்கு பெருமகிழ்ச்சி
அளிக்குமளவு உடலுறவில்
இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு
நேரம் பேசிக் கொண்டு,
விளையாடிக் கொண்டிருந்தாலும்
உடலுறவில் ஈடுபட்டால்
ஒரு நிமிடத்தில் விந்து
வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த
வேதனைப்படுவர்.
இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
வயதானோரும் வாலிப சுகம் அடைய :
முருங்கையின் மிகவும் பூப்போன்ற
இளம்பிஞ்சு எடுத்து வந்து,
பட்டாணி அளவு
சிறுசிறு துண்டுகளாக நறுக்கி,
லேசாக உப்பு,
மிளகு தூவி,
பச்சையாகவே
உண்டால்,
கிழவனுக்கும்
காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
|
இன்று உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது
பொய். சர்வம் வயாக்ராமயம் என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள்
வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக
அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன்
படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும்
அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா
உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித
பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து
வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம். இந்தியாவில் விளைந்த
பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம்
கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா
திருடி விட்டது. அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத
வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து
எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன்
கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.
அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக
வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம்
ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட
ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும்.
செலவும் மிகவும் குறைந்தது.
மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும்
வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம்
முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு,
மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும்
தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.
காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம்
உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார்
தேரையர்.
அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு.
அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால்
உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.
கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து
எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம்
பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால்
இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின்
வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.
நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு
வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை
வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து
நம் உயிரை எடுத்துவிடுகி றது.
|