Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

ற்றறிந்த அறிஞர் பெருமக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூர்மையான அம்புகள் போல.. கேட்பவர்களின் மனதை தைய்க்காமல் இருக்காது. இதோ சில அறிஞர்களின் முத்துக்கள்...  

 

ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.

யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு.

-விவேகானந்தர்.

 

நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில் கெட்டடிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும் கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.

-ப்ராங்கின்.

 

அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே.

-தாகூர்.

 

சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

-கண்ணதாசன்.

 

மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ, ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.

-பிளாட்டோ.

 

தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி விடுங்கள்.

-யாரோ.

 

நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

-கன்பூஷியல்.

 

பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும்.

-கவிஞர் கண்ணதாசன்.

 

கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்.

-பல்கேரியப் பழமொழி.

 

எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும், எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு.

-சிங்சௌ.

 

 

 

 

 

 

 

என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.

-மாவீரன் நெப்போலியன்.

 

உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான். உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை வாங்கினாலும் அது ஆதாயம் தான்.

-யங்.

 

பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.

-யாரோ.

 

நூலறிவு பேசும்- மெய்யறிவு கேட்கும்.

-ஹோம்ங்.

 

நிச்சயமாகவே, நெருப்பு விறகை சாப்பிடுவது போல, பொறாமை நன்மைகளை சாப்பிட்டுவிடும்.

-நபிகள்.

 

பணக்காரனாக வேண்டுமென்று விரும்புகிறவன் கஞ்சனாக இருக்கிறான். நான் பணக்காரன் என்று நினைத்து செலவு செய்பவன் ஏழையாகின்றான்.

-ஷேக்ஸ்பியர்.

 

நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஓரே மதம்தான்.

-வால்ட்டேர்.

 

கடினமான செயலின் சரியான பெயர் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் கடினம்.

-செஸ்டர்ன்.

 

துன்பம் வந்து விடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் இருக்கிறதே   இவை துன்பத்தை விட துயரமானவை.

-ஹைஸாடிக்.

 

எப்போது நீ வணங்கத் தொடங்குகிறாயோ அப்போதிலிருந்து நீ வளரவும் தொடங்குகிறாய்.

-ஸ்டர் பீல்டு.

 

பிறருடைய நம்பிக்கையை காப்பாற்றுங்கள். பிறர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாலும் நீங்கள் பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.

-முகம்மது நபி.

 

நானும் குறைகள் நிறைந்த மனிதனாக இருப்பதாலும், எனக்கும் பிறருடைய அனுதாபம் தேவைப்படுவதாலும், நான் பிறருடைய குறைகளை கண்டுபிடிக்க அவசரப்படுவதில்லை.

-காந்தியடிகள்.

 

-- 2   3   4   5