Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

இந்த அநியாயத்தைப் பாரீர்! எங்களையும் வாழ வையுங்கள்?!!!!
 
 
1001 லிட்டர் பால் ஊற்றி சாமிக்கு அபிஷேகம் செய்தனராம். புதுச்சேரி அருகே பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நேற்று (4.8.2008) சிறப்பு பூஜை நடந்ததாம். அப்போது 1001 லிட்டர் பால் ஊற்றி சாமிக்கு அபிஷேகம் செய்தனராம்.

2004-05 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரத்துறை ஆய்வின்படி சராசரியாக 57.8 விழுக்காடு கர்ப்பிணிப் பெண்கள், 56.1 விழுக்காடு திருமணமான பெண்கள். 79.1 விழுக்காடு குழந்தைகள் இந்தியாவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர் என்று மக்களவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசு தெரிவித்துள்ளார் (தினமணி, 15.3.2007).

ஒரே ஆண்டில் உலக அளவில் மரணம் அடையும் குழந்தைகள் 1.25 கோடியாகும். அதில் இந்தியாவில் மட்டும் 25 லட்சம் குழந்தைகள் மரணம் அடைகின்றனர்.

முதல் பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் மரணம் அடையும் குழந்தைகள் இந்தியாவில் ஆயிரத்துக்கு 58 ஆகும். உலக அளவில் எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளில் 35 விழுக்காடு இந்தியாவில்தான்.

போதிய சத்துணவு கிடைக்காத கொடுமையால் ஏற்படும் மரணம் இது.இந்த யோக்கியதை உள்ள இந்தியாவில், குத்துக்கல்லு சாமிக்கு 1001 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் என்றால், இதைவிட ஈவு இரக்கமற்ற குரூரமான செயல் வேறு உண்டா?

பால் சத்துள்ள உணவு அல்லவா! அதை நாசப்படுத்தலாமா?

இத்தகைய பேர்வழிகளை கொலைக் குற்றத்துக்குச் சமமாக மதித்துத் தண்டனை கொடுக்கவேண்டாமா?

பக்தியின் பேரால் - உற்பத்தி நாசம் என்ற கொடுமையல்லவா இது? அத்தியாவசியப் பொருள் நாசத் தடுப்புச் சட்டம் என்ன செய்கிறது? நன்கு குறட்டை விட்டுத் தூங்குகிறதோ!